செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (10:08 IST)

டி 20 உலகக் கோப்பை அணியில் இருந்து ரிங்கு சிங் நீக்கப்பட்டாரா?

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது ஐபிஎல் தொடரில் கோலி மிகச்சிறப்பாக ஆடிவருவதால் அவரை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ தேர்வுக்குழு உள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற மாட்டார் என தெரிகிறது.

மெதுவான ஆடுகளங்களில் அவர் தடுமாறி வருவதால் அவரை உத்தேச அணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.