திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:34 IST)

கோலி நான்காம் இடத்தில் விளையாட பொருத்தமானவர்… ஏபி டிவில்லியர்ஸ் சொல்லும் காரணம்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது. குறிப்பாக நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்ப்து என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்காக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை முயன்று பார்த்தாயிற்று. இதனால் உலகக் கோப்பையில் யாரை அந்த இடத்தில் இறக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் கோலியின் மிகச்சிறந்த நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ் “கோலிதான் இந்தியாவில் நான்காம் இடத்தில் விளையாட சிறந்த வீரர். ஏனென்றால் அவர்தான் ஒட்டுமொத்த இன்னிங்ஸையும் ஒருங்கிணைத்து விளையாடக் கூடியவர்” எனக் கூறியுள்ளார். முன்னதாக பிசிசிஐ யும் கோலியை நான்காம் இடத்தில் இறக்கலாமா என்பது குறித்து யோசித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.