வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:20 IST)

கோலி கிரிக்கெட்டுக்கு வராமல் இருந்திருந்தால்… புவனேஷ்வர் குமாரின் ஜாலி பதில்!

இந்திய கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் கோலி. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் அவர் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு தனது 19 வயதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலி அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வடிவக் கிரிக்கெட் போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரராக இருக்கிறார்.

இந்நிலையில் பிட்னெஸ் ஃப்ரீக்காக இருக்கும் கோலி, தன்னுடைய உடலைப் பேணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்களை அடிக்கடி சமூகவலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான புவனேஷ்வர் குமார் “கோலி கிரிக்கெட்டுக்கு வராமல் இருந்திருந்தால், அவர் WWE வீரராக சிறப்பாக வந்திருப்பார்” என ஜாலியான பதிலை அளித்துள்ளார்.