அவங்க ரெண்டு பேரையும் கோலி பாத்துப்பார்.. அஜித் அகார்கரின் நச் பதில்!
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரை சமாளிக்க ஏதேனும் ஸ்பெஷல் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அகார்கர் “அவர்களை விராட் கோலி பார்த்துக்கொள்வார்” எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தனது கேரியரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கோப்பை அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூரியகுமார் யாதவ் , திலக் வர்மா இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா