திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (15:54 IST)

சச்சினின் முக்கியமான சாதனையை முறியடித்த கோலி..!

இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, நேற்று உலகக்கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்தார்.

நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 11 ரன் கள் அடித்தபோது, டி-20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள  ஜெயவர்தனே( இலங்கை -1016) சாதனையை முறியடித்து, விராட் கோலி அதிக ரன்கள் குவிந்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.

இதே போட்டியில் அவர் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகால சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதிகரன்கள் சேர்த்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவில் சச்சின் 3300 ரன்களை சேர்த்திருந்தார். இப்போது கோலி அந்த சாதனையை முறியடித்து 3350 ரன்கள் சேர்த்துள்ளார்.