வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (08:47 IST)

ஒரு நாள் போட்டிகளில் இதுதான் உச்சம்… இந்திய அணி படைத்த சாதனை!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நேற்றோடு நிறைவு பெற்றது.

இந்த தொடரின் மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய இந்த நிலையில் 391 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மடமடவென விக்கட்டையே இழந்ததை அடுத்து 73 ரணன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு அணியும் எதிரணியை 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில்லை. இதன் மூலம் அந்த சாதனையை படைத்த முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.