வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (09:26 IST)

உலக கோப்பை ஹாக்கி: இன்றைய போட்டிகளின் விபரங்கள்!

hockey
உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து தற்போது பார்ப்போம். 
 
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தியது என்பதும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் டிரா செய்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று எந்தெந்த அணிகளுக்கு போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
1. மதியம் 1 மணிக்கு மலேசியா-சிலி அணிகள் மோதவுள்ளன.
 
2. மதியம் 3 மணிக்கு நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
 
3. மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
 
4. இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
 
 
Edited by Siva