திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By

கோலி கிரேட் பிளேயர்… ரோஹித் அவரை விட கிரேட்- பாகிஸ்தான் மக்கள் புகழும் இந்திய வீரர்கள்!

பாகிஸ்தான் மக்கள் இப்போது இருக்கும் இந்திய வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை மிகவும் நேசிக்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீர்ர சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடப்பது ஒரு போர் போல இரு நாடுகளிலும் ஊதிப் பெருக்கப்படும். ஆனால் இரு நாட்டு மக்களும் மற்ற நாட்டு திறமையான வீரர்களை நேசிப்பவர்கள்தான். ஏனென்றால் ஷாகித் அப்ரிடியில் இருந்து இப்போது இருக்கும் பாப ஆசம் வரை இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமான வீரர்களாக இருந்துள்ளனர்.

அதே போல இந்தியாவின் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் பாகிஸ்தானிய மக்கள் நேசிக்கிறார்கள் என சோயிப் அக்தர் கூறியுள்ளார். அதில் ‘இப்போது இருக்கும் இந்திய அணியை சிறந்த அணி இல்லை என்று பாகிஸ்தானியர் கூட சொல்லமாட்டார். அவர்கள் கோலியை கிரேட் ப்ளேயர் என்கிறார்கள். ரோஹித்தை அவரை விட கிரேட் பிளேயர் என்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.