1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

காரைக்கால் மாவட்ட செயலாளர் வெட்டிப் படுகொலை!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பாமக செயலாளராக இருப்பவர் தேவமணி.

இவர் காரைக்காலுக்கு அருகாமையில் உள்ள திருநள்ளாறில் வசித்து வருகிறார். நேற்றிரவு இவர் கடைவீதியில் தனது இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியான தேவமணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொலை தொடர்பாக வழக்குப் பதிவு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.