செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:26 IST)

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்திருந்தார். இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய தொடரில் கோலி கலந்துகொண்டார். அதனால் அவர் மேல் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை.

ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் கோலி தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். பெர்த் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.  இதன் மூலம் இந்த தொடரில் அவரின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இந்திய வீரர்களை சந்தித்து உரையாடினார். அப்போது கோலியிடம் “பெர்த்தில் உங்களுக்கு நல்ல நேரம். அந்த நேரத்தில் ஆஸி அணி ஏற்கனவே தேவையான அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தோம்” எனக் கூறினார்.

அதற்கு கோலி “எப்போதும் கொஞ்சம் மசாலா தூவ வேண்டும் இல்லையா” எனக் கேட்க அதற்கு ஆண்டனி “ஒரு இந்தியனாக உங்களுக்கு அது நன்றாகவே தெரியும்” எனக் கூறியுள்ளார்.