திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (12:55 IST)

பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வேண்டும்… சுப்மன் கில்லுக்கு கோலி அறிவுரை!

இந்திய அணியின் இளம் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக கவனம் ஈர்த்து வருகிறார் சுப்மன் கில்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். சிறப்பான இன்னிங்ஸ்களால் அவர் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தனக்கு கோலி வழங்கிய அறிவுரை குறித்து அவர் கூறியுள்ளார். அதில் ‘எப்போதும் பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என கூறுவார் விராட் கோலி. பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் செய்யும்போது மனநிலை மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.