திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (11:33 IST)

2 கோடி ரூபாய் செட் மழையில் நாசம்… அதிர்ச்சியில் அஜித் பட தயாரிப்பாளர்!

போனி கபூர் தயாரிக்கும் மைதான் படத்திற்காக போடப்பட்டுள்ள செட் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருகிறார். அதே சமயம் இந்தியில் அஜய் தேவ்கன்னை வைத்து மைதான் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதற்காக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக 2 கோடி ரூபாய் செலவில் செட் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் இந்த செட் முழுவதும் நாசமாகியுள்ளதாம். அதனால் மீண்டும் செட் அமைத்து ஷூட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளாராம். ஏற்கனவே அந்த படத்துக்கு நிறைய நிதிச் சிக்கல் உருவாகியுள்ள நிலையில் இதனால் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.