வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (16:13 IST)

’’அதானிக்கு கடன் கொடுக்க வேண்டாம்!!! ’’இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையே பரப்பரப்பு...

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியினிடையே அதானிக்குக் கடன் வழங்காதீர்கள் என்ற பதாகையுடன் மைதானத்தில் ஒரு நபர் இறாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா கால ஊரடங்கில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்தன.

இதையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று முதல் ஒருநாள் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதி; மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 374 ரன்கள் குவித்தது.

இப்போட்டியின் 6 வது ஓவரின்போது, ஒரு ரசிகர் , கையில் பாதையுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். அதில், அதானிக்குக் கடன் வழங்காதீர்கள்…என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த ரசிகரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் விளையாட்டு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.