ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (10:32 IST)

ரிக்கி பாண்டிங் இடத்தில் இவரா? … நண்பரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் இழுக்க கங்குலி ஆர்வம்!

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான். கேப்டனாக படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை வென்று விடைபெற்றுள்ளார்.            

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள அவரை அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்க, அந்த அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் ஜாக் காலிஸை தங்கள் ஆலோசகராக நியமிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், அந்த அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், ராகுல் டிராவிட்டை டெல்லி கேப்பிடல்ஸின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி அணியின் இயக்குனராக இருக்கும் சவுரவ் கங்குலிதான் தனது நண்பரான டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.