1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (08:10 IST)

5வது டெஸ்ட் போட்டி: வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

india vs england
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்கள் எடுத்து உள்ளது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது
 
நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.  ஜோ ரூட் 76 ரன்களுடனும் ஜானி பெயர்ஸ்டோ 72 ரன்களுடனும் விளையாடி கொண்டிருப்பதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே இந்த தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளையும் இங்கிலாந்து ஒரு வெற்றியும் பெற்றுள்ளது என்பதும் ஒரு போட்டி டிராவில் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது