1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kane Williamson will not play the first world cup match against england

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகிய வில்லியம்சன்!

கேன் வில்லியம்சன்
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்ற அச்சம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அணியில் இணைக்கப்பட்டு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நியுசிலாந்து அணி விளையாடும் முதல் போட்டியில் இருந்து வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதின என்பதால், இந்த ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டியின் முதல் போட்டியிலேயே இரு அணிகளும் மோதுகின்றன.
அடுத்த கட்டுரையில்
“இந்த முறை தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்வோம்..” தென்னாப்பிரிக்க வீரர் நம்பிக்கை!