புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (14:55 IST)

“இந்த முறை தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்வோம்..” தென்னாப்பிரிக்க வீரர் நம்பிக்கை!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் ஆருடம் சொல்லி வருகின்றனர். அதில் ஒருவர் கூட தென்னாப்பிரிக்க அணியைப் பற்றி சொல்லவில்லை.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரர் கசிகோ ரபாடா தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார். இதுபற்றி “ தென்னாப்பிரிக்கர்களுக்கு நம்பிக்கை பஞ்சம் இருக்காது.  அதனடிப்படையில் உலகக் கோப்பையில் பங்கேற்று, அதை வெல்வோம் என்ற நம்பிக்கையும் வைத்துள்ளோம். இந்த முறை இறுதிப் போட்டிக்கு சென்று அதை நிஜமாக்குவோம்” எனக் கூறியுள்ளார்.