1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (13:46 IST)

கேன் வில்லியம்சனுக்கு கொரோனா; அதிர்ச்சியில் நியூஸிலாந்து அணி!

நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது நியூஸிலாந்து அணி மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் கேன் வில்லியம்சன். நியூசிலாந்து – இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் இன்றைய டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் இல்லாமல் விளையாடுவது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சக வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.