1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kane Williamson may be released by SRH

கேன் வில்லியம்சனுக்கும் டாட்டா காட்டப்போகும் சன் ரைசர்ஸ் அணி!

கேன் வில்லியம்சன்
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கேன் வில்லியம்ஸன் ஏலத்துக்கு விடுவிக்கப் படலாம் என்று சொல்லப்படுகிறது.

சன் ரைசர்ஸ் அணிக்காக கோப்பையைப் பெற்றுத் தந்த டேவிட் வார்னரை சில ஆண்டுகளுக்கு முன்னர் கழட்டி விட்டது சன் ரைசர்ஸ் ஐதராபாத். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் கேப்டனாக பொறுப்பேற்ற கேன் வில்லியம்சன் கேப்டனாக்கப்பட்டார்.

ஆனால் 2 ஆண்டுகளில் அவர் தலைமையில் அணி மோசமாக விளையாடியது. இதனால் அவருக்காக ஒதுக்கப்பட்ட 14 கோடி ரூபாய் அதிக தொகையாக கருதப்பட்டு, இப்போது அவர் விடுவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்க்ஸை ஏலத்தில் எடுத்து கேப்டனாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமான நாள் இன்று!