வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (14:23 IST)

சோஷியல் மீடியா விற்பன்னர்கள் இந்திய அணியைத் தேர்வு செய்வதில்லை… கே எல் ராகுல் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸிலும் நடந்தது.

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடி அவுட்டான போது கே எல் ராகுல் களத்தில் இருந்தார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் வழக்கம்போல சொதப்பி மீண்டும் ஒருமுறை தான் ஒரு “choker” என்பதை நிரூபித்தார்.

இதனால் கே எல் ராகுலை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு சர்பராஸ் கானை அவர் இடத்தில் நிரந்தரமாக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் “சோஷியல் மீடியாவில் கருத்து சொல்லும் விற்பன்னர்கள் யாரும் இந்திய பிளேயிங் லெவனை தீர்மானிப்பதில்லை.” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கே எல் ராகுலுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெளிவாகியுள்ளது.