திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:30 IST)

ராகுலை தூக்கிட்டு பண்ட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்… முன்னாள் வீரர் ஆலோசனை!

இந்திய அணியில் உலகக்கோப்பை டி 20 தொடரில் அரையிறுதி வாய்ப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா, அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் “கே எல் ராகுல் இதே போல தடுமாறினால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம். இந்தியா இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் காயத்தால் விளையாடவில்லை எனில் அப்போதும் ரிஷப் பண்ட்டை ரோஹித் ஷர்மாவோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம்” எனக் கூறியுள்ளார்.