1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. Would you allow this to happen in your bed Anushka Kohli

''உங்கள் படுக்கையறையில் இப்படி நடந்தால் அனுமதிப்பீர்களா?''- அனுஷ்கா கோலி

Would you  bed
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அறையில் நுழைந்த ஒரு ரசிகர் கோலியின் உடைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறித்து அனுஷ்கா சர்மா விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் சில ஆண்டுகளாக  ஃபார்மில்லாமல் இருந்த நிலையில், தற்போது டி-20  உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்த ஒரு வீரர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி, ரசிகர்களைச் சந்திப்பதில் ஆர்வமுடன் இருந்தாலும் இந்த வீடியோ அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இந் நிலையில், கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, கோலியின் அறையில் நுழைந்து இப்படி வீடியோ எடுத்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘’இதேபோல் உங்கள் வீட்டு படுக்கை அறையில்  நுழைந்தால் அனுமதிப்பீர்களா’’ என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலியாவின் இமாலய இலக்கு: 3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து தத்தளிக்கும் அயர்லாந்து