1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (09:51 IST)

டாஸ் வென்ற நியுசிலாந்து அணி எடுத்த முடிவு… இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றங்கள்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு முக்கியக் காரணமே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுதான்.

அந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறான முடிவு என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியிருந்தார். மேலும் அணியில் கே எல் ராகுல் மற்றும் சிராஜ் ஆகியோர் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து அவர்களை நீக்க சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சற்று முன்னர் தொடங்கியுள்ள புனே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் அதிரடி மாற்றமாக கே எல் ராகுல், சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு, ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்  மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.