வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (07:35 IST)

இந்தியாவுக்கு மீண்டும் ஒரு சோகம்.. ஒரு கிலோ வித்தியாசத்தில் பறிபோன பதக்கம்..!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு கிலோ குறைவாக எடை தூக்கியதால் பதக்கம் இந்தியாவுக்கு கிடைக்க இருந்த பதக்கம் பறிபோனதாக தகவல் வெளியாகி உள்ளது

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு கிடைக்க வேண்டிய தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் பறிபோனது என்ற தகவல் 140 கோடி இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மீராபாய் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டுவிட்டார்.

 3வது இடம் பிடித்த தாய்லாந்து வீராங்கனை 200 கிலோ எடையை தூக்கிய நிலையில் மீராபாய் 199 கிலோ எடையை தூக்கியதால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஒரே ஒரு கிலோ எடை வித்தியாசத்தில் வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனதால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீராபாய் ஏற்கனவே டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva