1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Josh hazzlewood returns to gabba test

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட்டை ஆஸி அணி வென்றது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்ற பிறகு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இது அவரின் விமர்சனத்துக்கான தண்டனை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசியுள்ள கவாஸ்கரும் அரசியல் காரணமாகவே ஹேசில்வுட் நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் அதை ஆஸி அணி வீரர்கள் மறுத்தனர்.

இந்நிலையில் நாளை நடக்கவுள்ள பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட்டுக்கு பதில் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்புவார் என ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். நாளை காலை 5.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!