1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma may come as opener in Brisbane test

மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளாரா ரோஹித் ஷர்மா… வலைப்பயிற்சியில் நடந்த மாற்றம்!

ரோஹித் ஷர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அதை விமர்சித்துள்ளனர். இந்நிலையில் பிரிஸ்பேனில் நடந்து வரும் வலைப்பயிற்சி போட்டியில் புதிய பந்தை பேட்செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளது உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை FIFA கால்பந்து போட்டி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!