செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (17:08 IST)

என்னைக்கு நான் உன்கூட இருப்பேன்… மகனோடு எமோஷனல் புகைப்படம் வெளியிட்ட இந்திய வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது மகனோடு இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பல போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள மெகா ஏலத்துக்காக அவரைக் கழட்டிவிட்டது மும்பை.

இதனால் அவர் இப்போது புதிய அணியான அகமதாபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது.

இப்போது அகமதாபாத் அணிக்கு தலைமையேற்றுள்ள ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரை ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு  உள்ளார். அந்த  புகைப்படத்தில் மகனுடன் நடந்து செல்லும் அவர் ‘எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்’ எனக் கூறியுளார்.