திங்கள், 4 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (09:09 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள்… இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்த அரிய சாதனை!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கடந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். அவர் நியுசிலாந்து அணிக்கு எதிரான தற்போது நடந்து முடிந்த போட்டியில் சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் அவர் 10000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறைந்த ஆண்டுகளில் 10000 ரன்களை எட்டியவீரர் என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார். அவர்  9 ஆண்டுகள் 171 நாளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் அலெஸ்டர் குக் மற்றும் சங்ககரா ஆகியோர் உள்ளனர்.

முன்னதாக இந்த தொடருக்கு முன்பாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரூட் விலகினார். ஜோ ரூட்டின் இந்த முடிவு அவரின் ரசிகர்களுக்கு பெருத்த  ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தனது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் ரூட்.