ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (21:04 IST)

தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு: ராதாகிருஷ்ணன் தகவல்

corona
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த BA4 என்ற வகை வைரஸ் 4 பேருக்கும் BA5 என்ற வகை உருமாறிய கொரோனா 5 பேர்களுக்கு பரவியிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதை அடுத்து இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்