தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்
- டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!
- வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !
- தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!
- 17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!
5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கப் போகிறது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் பிசிசிஐ ஒரு புதிய விதியை (2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த விதிதான்) அமல்படுத்த உள்ளதாகவும் அதை அமல்படுத்தினால்தான் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை அன்கேப்ட் (அதாவது உள்ளூர் வீரர்) வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன்கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிசிசிஐ இதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகவும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கவுள்ளதாகவும் ஆனால் RTM எனும் விதி இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. RTM விதிப்படி தங்கள் அணியில் இருந்த ஒரு வீரரை மற்றொரு அணி ஏலத்தில் எடுக்கும் போது அந்த அணி அதே விலைக்கு அந்த வீரரை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால், அந்த அணிக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் விதியாகும்.
அடுத்த கட்டுரையில்