1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (06:33 IST)

பெங்களூரு அணி அபார வெற்றி.. பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பா?

bangalore
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சின்ன வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ரஜத் படிதார் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். 
 
இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய  டெல்லி அணியும் ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 19.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
 
இதனை அணி இதனை அடுத்து டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்தது என்றே கூறலாம். ஆனால் அதே நேரத்தில் பெங்களூர் அணி 12 புள்ளிகள் உடன் பிளஸ் ரன் ரேட்டில் இருப்பதால் அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் அதாவது சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அபாரமான ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சின்ன வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva