செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 18 மே 2024 (16:13 IST)

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும். சென்னை அணியின் சூப்பர் ஸ்டாரான தோனி இந்த சீசனில் எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார்.

அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்கள்தான் விளையாட முடிவதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஆர் சி பிக்கு எதிரான இன்றைய போட்டியே கூட தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள விராட் கோலி “நானும் தோனியும் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம். நாங்கள் இருவரும் பல முறை இந்திய அணிக்காக இணைந்து  விளையாடியுள்ளோம். தோனி கடைசி வரை நின்று பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அதனால் தோனியை கடைசியாக ஒருமுறை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.