வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (10:46 IST)

''அவருக்காக கோப்பை வெல்வது எங்களது கடமை’’- ரோஹித் சர்மா

''அவருக்காக கோப்பை வெல்வது எங்களது கடமை’’- ரோஹித் சர்மா
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான  உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் யார் ஜெயித்து சாம்பியன் கோப்பை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இப்போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

‘’இந்திய கிரிக்கெட்டிற்காக மிகப்பெரிய காரியங்களை ராகுல் ட்ராவிட் செய்துள்ளார்.  உலகக் கோப்பை வெல்லும் பிரமாண்ட நிகழ்வில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவருக்காக கோப்பை வெல்வது எங்களது கடமை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்’’ நாளை வரப்போகும் ரசிகர்கள் கூட்டம் நிச்சயம் ஒருசார்பு கொண்டதாக இருக்குமென எனக்கு தெரியும். 1.3 லட்சம் மக்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட வேறெதுவும் அதிக மன நிறைவை தராது. அதை நிறைவேற்றுவதே எங்கள் இலக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.