செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (15:46 IST)

ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்ற சச்சின் – கௌரவப்படுத்திய ஐசிசி

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டி உயரிய விருதான “ஹால் ஆஃப் ஃபேம்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி.

உலக கிரிக்கெட் வரலாற்றில் புறக்கணிக்க முடியாத கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 90களின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மட்டையை எடுத்து கொண்டு வீதிக்கு வந்ததற்கு சச்சின் முக்கியமான காரணம். 100 முறை சதம் அடித்து உலக சாதனை படைத்தவர் சச்சின்.

மேலும் பல சாதனைகளை படைத்த சச்சின் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் விளையாட்டு திறன் குறித்த தனது கருத்துகளை கூறி வருகிறார். சச்சினின் கடந்த கால சாதனைகள் இந்திய அணியை உலக கிரிக்கெட் தரவரிசையில் முக்கியமான இடத்திற்கு கொண்டு சென்றது. அவரின் இந்த சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி வழங்கும் உயரிய விருதான “ஹாக் ஆஃப் ஃபேம்” விருதை சச்சினுக்கு வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஆலம் டோனல்டுக்கும், ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் “ஹால் ஆஃப் ஃபேம்” வாங்கும் வீரர்களில் சச்சின் ஆறாவது நபர். இதற்கு முன்னரே பிஷன் சிங், கபில் தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட் ஆகியோர் இந்த விருதினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.