சொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி மீது சேவாக் ஆவேசம்?

SHEWAG
Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (14:32 IST)
கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல புகார்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தன் பங்குக்கும் முன்னாள் வீரர் சேவாக் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனபோது அணியில் சீனியர் வீரர்கள் அதிகம் இருந்தனர். 2011 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு தோனி சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு இளம் வீரர்களை அணியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்த இளம் அணியினரை கொண்டே டி20 முதல் பல தொடர்களை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.

இந்நிலையில் தோனியால்தான் பல சீனியர் வீரர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள் என யுவராஜ் சிங்கின் அப்பா யோகராஜ் சிங் குற்றம் சாட்டினார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வீரர் சேவாக் “2011 உலக கோப்பைக்கு பிறகு என்னை நிறைய ஆட்டங்களில் சேர்த்து கொள்ளவில்லை. மறைமுகமாக நான் புறக்கணிக்கப்பட்டேன். என்னை நீக்குவதற்கு முன்பு என்னிடம் அந்த தகவலை கூட தெரிவிக்கவில்லை. முன்பெல்லாம் நீக்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவிப்பார்கள். 2006க்கு பிறகு அந்த நடைமுறையெல்லாம் இல்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க நிர்வாகம் ரொம்ப யோசிக்கிறது. அணியை பலப்படுத்த வேண்டும் என்றால் சிலரை நீக்கிதான் ஆக வேண்டும்” என கூறியுள்ளார்.

தோனி வந்த பிறகுதான் அணி வீரர்கள் சொல்லாமல் நீக்கப்பட்டதாக மறைமுகமாக சேவாக் பேசுவதாக பலர் கூறுகின்றனர். அப்போதெல்லாம் சொல்லாமல் நீக்கிய நிர்வாகம் இப்போது தோனியை நீக்க இவ்வளவு யோசிப்பது ஏன்? என மறைமுகமாக தோனியை சேவாக் தாக்குவதாக இந்த பேச்சு உள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :