1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (10:18 IST)

ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13  ஆம் தேதி வரை நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, தீபக் சாகர் ஆகிய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஷமி கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில்தான் கடைசியாக டி 20 போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் அவர் இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது பூம்ராவுக்கு பதில் அவர் தேர்வாகியுள்ள நிலையில் அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் பந்துவீசி அனுபவம் பெற்ற ஷமியை விட வேறு சிறந்த பவுலர் இப்போது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

edited by vinoth