வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (09:35 IST)

“மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்”… முகமது ஷமி சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்திய கிரிக்கெட் கடந்த காலங்களில் கண்டுபிடித்த மிகச்சிறந்த வேகபந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர். கடந்த சில மாதங்களாகவே அவர் டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை.  கடைசியாக அவர் டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். இந்நிலையில் முகமது ஷமி தற்போது கேப்டன் ரோஹித் ஷர்மா உடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் அதிர்ச்சியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் “ஒரு கடினமான நேரத்தில் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக நிற்காவிட்டால், கிரிக்கெட் வாழ்க்கை இல்லாமல் போயிருக்கும். மன உளைச்சலால் மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். நான் மாடியில் இருந்து குதித்து விடுவேனோ என்று நன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பயப்பட்டனர். இதில் இருந்து வெளியேற கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி அவர்கள் எனக்கு அறிவுறுத்தினர்.” எனக் கூறியுள்ளார்.

முகமது ஷமி, தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். அதற்கு முன்பாக ஷமியின் மனைவி அவர் மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.