ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:08 IST)

பும்ராவுக்கு பதில் முகமது ஷமி: பிசிசிஐ!

பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

 
அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் தங்கள் விளையாடும் வீரர்களை அறிவித்துள்ளன. இந்திய அணியும் சமீபத்தில் அறிவித்தது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13  ஆம் தேதி வரை நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, தீபக் சாகர் ஆகிய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் முன்னதாக தீபக் சஹார் காயம் காரணமாக விலகியதையடுத்து ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 Edited By: Sugapriya Prakash