வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (15:09 IST)

“ஷமியை வீட்டில் உட்காரவைப்பது என்னைக் குழப்புகிறது…” ரவி சாஸ்திரி விமர்சனம்

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஆசியக் கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறியது. இதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் பவுலிங் சொதப்பலே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்து பேசியுள்ளார். இந்திய அணியில் முகமது ஷமில் இல்லாதது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி "குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேர்வு சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியும். ஸ்பின்னருக்கு இதில் அதிகம் இல்லை. நீங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் (ஹர்திக் உட்பட) இங்கு வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு அந்த கூடுதல் தேவை... முகமது ஷமி போன்ற ஒருவர் வீட்டில் அமர்ந்து தனது குதிகால்களை குளிர்விப்பது என்னை குழப்புகிறது. ஐபிஎல் தொடரை சிறப்பாக முடித்த அவருக்கு அவருக்கு வாய்ப்புக் கிடைக்காததை நான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.