திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (13:20 IST)

CSK அணியோடு இணைந்த ஆல்ரவுண்டர்… வெளியான வைரல் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி விசா பிரச்சனையால் அணியோடு இணைவதில் தாமதம் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் சி எஸ் கே  வீரர் மொயின் அலி கலந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது அவர் விசாவைப் பெற்று அணியோடு இணைந்துவிட்டார். இது சம்மந்தமான வீடியோவை சி எஸ் கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனால் அடுத்த போட்டியில் சென்னை அணியில் மொயின் அலி இடம்பெறுவார் என்று நம்பலாம்.