செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (19:26 IST)

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி..! பஞ்சாப் அணி பந்துவீச்சு...!!

IPL
ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் தாங்கள் ஆடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 
 
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டக்கூடும். ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 14 முறை ஹைதராபாத்தும்7 முறை பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
 
பஞ்சாப் அணி வீரர்கள் பின்வருமாறு:
 
ஹிகர் தவான் (c), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா, சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
 
ஹைதராபாத் அணி வீரர்கள் பின்வருமாறு:
 
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (WK), ஷாபாஸ் அகமது, நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (c), புவனேஷ்வர் குமார், டி நடராஜன், ஜெய்தேவ் உனத்கட்.