1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (23:46 IST)

ஐபிஎல் 2022-; சென்னை கிங்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் வெற்றி

15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் நடந்த முதல் போட்டியில் சென்னைகிங்ஸ் கொல்கத்தாவிடம் தோற்ற நிலையில் இன்று லக்னோவிடம்  2 வது முறையாகத் தோற்றது சென்னை அணி. 
 
இன்று , டாஸ் வென்ற ல க்னோ அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் உத்தப்பா 20 ரன்களும்,  மொயீன் அலி 35 ரன்களும்,  டூப்பே 49 ரன்களும், ராயுட்ய் 27 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும்,, தோனி 16 ரன்களும், அடித்து அசத்தினர்.

எனவே  இன்றைய போட்டியில்,  நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் சென்னை கிங்ஸ் அணி  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து , லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து கடின இலக்கை   நோக்கி பேட்டிங் செய்த லக்னோ அணியில், காக் 61 ரன்களும்,   லீ விஸ் 55 ரன்களும், ராகுல் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே    லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை  கிங்ஸ் சார்பில், டிவைன் 2 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் டேஸ்பாண்டே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.