திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (12:13 IST)

ரன்னே அடிக்க விடல.. கோலியை காலி செய்ய சதியா? – குமுறும் ரசிகர்கள்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆர்சிபி அணி தோற்ற நிலையில் கோர்வையாக நடந்த சில சம்பவங்கள் கோலி ஓரம்கட்டப்படுகிறாரா என அவரது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பஞ்சாப் அணியுடன் விராட் கோலியின் ஆர்சிபி அணி மோதிய ஆட்டம் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரையிலான ஆட்டங்களில் மோசமானதாக பார்க்கப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ஆர்சிபி கோட்டை விட்டது கோலி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலக கோப்பை, டெஸ்ட் ஆட்டங்களில் சாதாரணமாக 50, 100 அடிக்கும் கோலி ஐபிஎல்லின் கடந்த இரண்டு பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். நேற்று பீல்டிங்கிலும் இரண்டு முறை அவர் கேட்ச்சை தவறவிட்டது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. முக்கியமாக கே எல் ராகுல் அடித்த பாலை தவறவிட்டது.

முன்னதாக ரோஹித் சர்மா – கோலி இடையே கேப்டன் பதவி குறித்து மோதல் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், கோலி அவுட் ஆனபோது ரோகித் ஷர்மா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கே.எல்.ராகுல் செஞ்சுரி அடித்ததற்கு வாழ்த்து தெரிவித்து ரோகித் ஷர்மா பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட அதே சமயம் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகியிருந்தார்.

கோலியை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் ரோகித் ஷர்மா பதிவிட்டுள்ளதாக கோலி ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தாவிட்டால் அவரது கேப்டன் பதவிக்கு போட்டியாக சிலர் வரவும் வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.