வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (17:07 IST)

ஐபிஎல் சூதாட்டம்… மேலும் 9 பேர் கைது!

ஐபிஎல் போட்டிகளை ஒட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கொல்கத்தாவில் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் உலகின் மிகவும் அதிகமான பணம் கொட்டும் தொடராக மாறியுள்ளன. இதனால் அதை ஒட்டி ரசிகர்களை சூதாட்டம் இழுக்கும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக சூதாட்டம் நடப்பதாக சைபர் கிரைம் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கொல்கத்தா போலிஸ் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பல ஆவணங்கள், 14 மடிக்கணினிகள், 17 செல்லிடப்பேசிகள், 3 தொலைக்காட்சிகள். நாளுக்கு நாள் சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.