திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (15:26 IST)

மனைவியின் பந்துகளுக்கு மட்டுமே கோலி பயிற்சி.. கவாஸ்கர் மோசமான கமெண்ட்!

சுனில் கவாஸ்கர் கோலி - அனுஷ்கா குறித்து அடித்த கமெண்ட்டிற்கு எதிர்ப்பும் ஆதரவும் குவிந்து வருகிறது.
 
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. 
 
இந்த ஆட்டத்தில் ஆர்சிபி மிகவும் மோசமாக விளையாடியது அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோலியின் ஃபில்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் இரண்டு கேட்சை விட்ட போது வர்ணனனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர், ஊரடங்கு காலத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துகளுக்கு மட்டுமே விராட் கோலி பயிற்சி எடுத்துள்ளார் என கமெண்ட் அடித்தார். 
 
சுனில் கவாஸ்கர் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்தது கேவலமானது என நெட்டிசன்கள் பலர் சுனில் கவாஸ்கருக்கு எதிராக பேசிவருகின்றனர். ஆனல ஒரு சாராரோ ஊரடங்கின் போது கோலியும் அனுஷ்காவும் கிரிக்கெட் விளையாடினார்கள் இதனைத்தான் காவஸ்கர் குறிப்பிட்டார் என நியாப்படுத்தியும் வருகின்றனர்.