’’உங்களால் தான் என் படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்தார்’’…. பிரபல நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

Sinoj| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (20:55 IST)சூரரைப் போற்று திரைப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் விஎஃபெக்ஸ் பணியில் ஈடுபடும்போது, மகிழ்ச்சியாக இருந்ததாக இப்படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு என்பவர் என்னால் வெயிட் பண்ண முடியவில்லை…சீக்கிரம் படம் பார்க்க வேண்டும் இந்த தீபாவளி அதிகத் தீ மூளப் போகிறது எனத் தனது ஆவலை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

suriya

இதற்குப் பதிலளித்த சூர்யா ;;எல்லா கிரிடிட்டும் உங்களைத்தான் போய்ச்சேரும் நீங்கள்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவை இப்படத்தில் நடிக்க வைக்க சம்மதிக்க வைத்தீர்கள்… அதனால் இப்படத்திற்குப் பெரும் ஆசீர்வாதம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :