ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (10:30 IST)

இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசை சொதப்பல்தான் காரணமா?

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்திய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. இநிந்லையில் இப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் படுதோல்விக்கு காரணமாக பேட்டிங் நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என சொல்லப்படுகிறது.

நடுவரிசையில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 6 ஆவது வீரராக களமிறக்கப்படும் வீரர் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடததால் நடுவரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. இதை பலப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் அடுத்தடுத்து வரும் உலகக்கோப்பை தொடர்களில் நம்பிக்கையோடு களமிறங்க முடியும்.