1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:32 IST)

கேரளாவில் கோரமுகம் காட்டும் கொரோனா - கெடுபிடிகள் அதிகரிப்பு!

வரும் 23, 30 ஆகிய 2 ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கேரளாவில் அமல்படுத்தப்படுகிறது. 

 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வரும் 23, 30 ஆகிய 2 ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்காக இன்று முதல் மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆம், தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிப்படுவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
 
‘ஏ’ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள், திருமணம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 
 
‘பி‘ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மட்டுமே அனுமதி.
 
‘சி’ பிரிவில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது ‘சி’ பிரிவில்  எந்த மாவட்டமும் வரவில்லை.