1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:18 IST)

வருமானத்துக்கு ஆசைப்பட்டு... தமிழக அரசை சாடும் டிடிவி!

தமிழகத்தில் மதுக் கடைகள் திறந்திருப்பது தொடர்பாக அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் டிவிட்டர் விமர்சித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மதுக் கடைகள், ஜவுளிக்கடைகள், திரையரங்குகள் உள்பட அனைத்தும் திறந்த நிலையில் உள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் டிவிட்டர் விமர்சித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது.  
 
இவ்வளவுக்கு பிறகும் எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், திமுக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது. மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா?