வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (14:52 IST)

ரிஷப் பண்ட் உள்ளே… யார் வெளியே?... மூன்றாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை இலங்கை வெல்ல, இன்னொரு போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் அணிக்குள் வர, கே எல் ராகுல் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (கீ), ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

இலங்கை அணி

பாத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (c), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ